search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழனி காட்டூரில்  பாலம் உடைந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்
    X

    உடைந்த பாலத்தை படத்தில் காணலாம்.

    கழனி காட்டூரில் பாலம் உடைந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்

    • மழை நீர் செல்வதற்காக சிறு பாலங்கள் அமைக்கப்பட்டனர்.
    • இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுகின்றனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி அருகே நாகர்கூடல் ஊராட்சிக்குட்பட்டது கழனி காட்டூர்.

    இந்த பகுதியில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலித்தொழிலை பெரிதும் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    இப்பகுதி பொதுமக்கள் விவசாய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்வதற்கும் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருவதால் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

    இங்கு நெல் காய்கறிகள் அதிக அளவில் விளைவிக்கப்படுவதால் உழவர் சந்தை, வாரச்சந்தைக்கு வாகனங்கள் மூலம் அதிகாலை நேரங்களிலேயே விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    கழனி காட்டூர் பகுதியில் சாலை அமைக்கும் பொழுது சுமார் 10 வருடங்கள் முன்பு ஆங்காங்கே இருக்கும் நீர்ஓடைகளில் இருந்து வரும் மழை நீர் செல்வதற்காக சிறு பாலங்கள் அமைக்கப்பட்டனர்.

    அதன் பின்னர் சாலை மறு சீரமைப்பு செய்யும் போது உடைந்த பாலம் பகுதிகளை சீரமைக்காமல் அப்படியே தார் சாலையை போட்டுள்ளனர். இதனால் உடைப்பு ஏற்பட்டிருந்த பாலம் அதிகளவில் பெரிய பள்ளமாக மாறியுள்ளது.

    இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுகின்றனர்.

    அப்பகுதியில் சேதமடைந்துள்ள சாலை மற்றும் பாலம் பகுதிகளை சீரமைத்து விபத்துக்கள் ஏற்படும் முன்னரே அவற்றை தவிர்க்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×