search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நரிப்பள்ளி கிராமத்தில்  சேலத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    நரிப்பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சேலத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நரிப்பள்ளி கிராமத்தில் சேலத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    • புதுப்பிக்கப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி பூஜை, கொடியேற்றுதல் நடந்தது.
    • சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே நரிப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சேலத்து மாரியம்மன் கோயில் உள்ளது.

    புதுப்பிக்கப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி பூஜை, கொடியேற்றுதல், கங்கனம் கட்டுதலுடன் தொடங்கியது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து கரிகோல உற்சவம், சக்தி அழைத்தல், தீர்த்தக்குடம், முளைப்பாரி, ஊர்வலம்பு ண்யாகவாகனம், வாஸ்து சாந்தி ஆகியவற்றை நடை பெற்றது. இன்று பிரவேச பலி, ம்ருத்சங்கிரணம் கும்ப அலங்காரம், முதல்கால யாகசாலை பூஜை, மஹா கும்பத்தில் ஸ்ரீ சேலத்து மாரியம்மன் ஆபாஹணம்வே திகார்ச்சனை த்ரியம்பிகா ஹோமம், விமான கலச பிரதிஷ்டை யும்அஷ்ட பந்தன யந்திர பிரதிஷ்டை, 2-ம்கால யாகசாலை பூஜை நடைபெற உள்ளது .

    இதனை தொடர்ந்து நாளை கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, ஸ்ரீ சேலத்து மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம், கோ பூஜை மற்றும் விஷ்வருப தரிசனம் அன்னதானம்நி கழ்ச்சியும் நடைபெற உள்ளது என கோயில் விழா கமிட்டி குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×