என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆய்வு ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆய்வு](https://media.maalaimalar.com/h-upload/2022/07/10/1726983-aaivu.jpg)
ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ரெத்தினமாலா ஆய்வு செய்தார். அருகில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் உள்ளார்.
ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆய்வு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
- ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடம், அங்கன்வாடி பள்ளி கட்டிடம் பழுதடைந்ததையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ரெத்தின மாலா கணக்குகளை ஆய்வு செய்தார். தற்பொழுது நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை மேல் தேக்க தொட்டி, மற்றும் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடம், அங்கன்வாடி பள்ளி கட்டிடம் பழுதடைந்ததையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக சரி செய்கிறோம் என்று உறுதி அளித்தனர். இந்த ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன், துணை தலைவர் ராதிகா பாஸ்கரன், ஊராட்சி செயலர் திருமால்வளவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.