என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழகத்தில் இன்று 434 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்10 Sept 2022 10:27 PM IST
- மருத்துவமனையில் 381 பேர் கொரோனா சிகிச்சைக்காக அனுமதி.
- அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 247 ஆண்கள், 187 பெண்கள் என மொத்தம் 434 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 85 பேர், கோவையில் 59 பேர், செங்கல்பட்டில் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிப்பு இல்லை,
அவற்றை தவிர பிற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. மருத்துவமனைகளில் இன்று 381 பேர் மட்டும் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 896 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Next Story
×
X