search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    முடக்கேரி கிராமத்தில் மகாகாளி வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    வாராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • காளி, வாராஹி சிலைகள் 16 அடி உயரம் உள்ளது.
    • மகாலட்சுமி சொரூபத்தில் உள்ள காளிக்கு பத்து கைகள் உள்ளன.

    தருமபுரி,

    தருமபுரி அருகே முடக்கேரி கிராமத்தில் 16 அடி உயரத்தில் மகாகாளி வாராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஒரு பரிகார ஸ்தலமாக உள்ளது.

    இந்தக் கோவிலில் காளி மகாலட்சுமி சொருபத்தில் காட்சி அளிக்கிறார். அஸ்ட காளி, அஸ்டபைரவர், அஸ்ட வாராஹி உள்ளது. இதில் எட்டு விதமான காளியும் உள்ளது. காளி, வாராஹி சிலைகள் 16 அடி உயரம் உள்ளது.

    மகாலட்சுமி சொரூபத்தில் உள்ள காளிக்கு பத்து கைகள் உள்ளன. இந்த பத்து கைகளிலும் சூலம், உடுகை பாம்பு, சிவன் கையில் இருக்கின்ற ஆயுதங்கள், மகாலட்சுமி கையில் உள்ள சங்கு சக்கரம், வாராஹி அம்சமான ஏர்கலப்பை உலக்கை, ஜபமாலை ஓலை சுவடி பிரம்மா, சிவன், விஷ்னு படைத்தல் காத்தல் அழித்தல் மும்மூர்த்திகளின் கைகளில் என்னென்ன இருக்கிறதோ அவைகள் இந்த அம்பாள் கைகளில் இருக்கும்.

    இங்கு வெள்ளி, திங்கள் அமாவாசை நாட்களில் பூஜைகளும் பரிகார பூஜைகளும் நடைபெறுகிறது. திருமணம் ஆகாத பெண்கள் திருமண தடை நீக்க மஞ்சள் மாலை சாத்தினால் திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறுவதாக ஐதீகம்.

    தருமபுரி மாவட்டத்தில் எங்கும் காணாத வகையில் 16 அடியில் அமைந்துள்ள ஸ்ரீவாராகி மற்றும் மகாலட்சுமி அம்சமுள்ள சாந்தமான காளிகாம்பாளை வணங்குவதற்காக தமிழகத்திலிருந்தும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இத்தளத்திற்கு வந்து செல்கின்றனர்.

    தேய்பிறை பஞ்சமியை யொட்டி நேற்று இந்த வாராகி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அங்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் தேங்காய் பூசணி எழுமிச்சை பழங்களிலிலும் விளக்கேற்றி வழிப்பட்டனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள வாராகி அம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    Next Story
    ×