என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நீர், மோர் தண்ணீர் பந்தலை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
தருமபுரி நகர தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தலை திறக்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவு விட்டார்.
- தாகத்தை தீர்க்கும் நீர்மோர், தர்பூசணி, இளநீர் அடங்கிய தண்ணீர் பந்தலை கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி திறந்து வைத்தார்.
தருமபுரி,
கோடை காலம் தொடங்கியதால் பொது வெளியில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். வெப்பத்தை சமாளிக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் பந்தலை திறக்க வேண்டும் என தி.மு.க தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவு விட்டார்.
இதனையடுத்து தருமபுரி கிழக்கு மாவட்ட நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் நாட்டான் மாது ஏற்பாட்டில் தருமபுரி பஸ் நிலையம் அருகே தாகத்தை தீர்க்கும் நீர்மோர், தர்பூசணி, இளநீர் அடங்கிய தண்ணீர் பந்தலை கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். அதனையடுத்து தருமபுரி நகராட்சி அலுவலகம் முன் நகர மன்ற தலைவர் லட்சுமி மாது தலைமையில் தண்ணீர்பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் லட்சுமி மாது பொருளாளர் தங்கமணி, ஒன்றிய செயலாளர்கள் வைகுந்தம், மல்லமுத்து, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி மற்றும் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.