என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிப்பு
- நேற்று 1569 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்றுகாலை முதல் 200 கனஅடி அதிகரித்து வெளியேற்றப்படுகிறது.
- 132 கனஅடிநீர் வருகிற நிலையில் 40 கனஅடிநீர் பாசனத்திற்கும் மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. 71 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 70.44 அடி நீர்மட்டம் உள்ளது.
அணையிலிருந்து மதுைர மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1769 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. நேற்று 1569 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்றுகாலை முதல் 200 கனஅடி அதிகரித்து வெளியேற்றப்படுகிறது.
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 135.60 அடியாக உள்ளது. 673 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 132 கனஅடிநீர் வருகிற நிலையில் 40 கனஅடிநீர் பாசனத்திற்கும் மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.31 அடி, 3 கனஅடிநீர் வரும் நிலையில் திறப்பு இல்லை.