என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயிலாடும்பாறை அரசு பள்ளியில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து மீன் வளத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக், கலெக்டர் முரளிதரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மயிலாடும்பாறையில் அரசு பள்ளிகளில் நான் முதல்வன் திட்டம் குறித்து ஆய்வு

- அரசு பள்ளியில் உணவின் தரம் குறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர், கலெக்டர் முன்னிலையில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
- கல்வி சார்ந்த அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்திட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட அறிவுறுத்தினார்.
தேனி:
தேனி மாவட்டம், க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, எட்டப்பராஜபுரம் ஊராட்சி வேலாயுதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ராஜேந்திராநகர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திக், கலெக்டர் முரளிதரன் முன்னிலையில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, அரசின் அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறதா, காலை உணவு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களின் இருப்பு, சமையல் பாத்திரங்களின் எண்ணிக்கை, தண்ணீர் வசதி, மின் வசதி, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, ராஜேந்திராநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் முறை மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டி கையேடுகள், பயிற்சி அளிக்கும் முறை குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
அேதப்போல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டும் வரலாற்று சிறப்புமிக்க திட்டமான நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ, மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி சார்ந்த அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்திட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட அறிவுறுத்தினார்.