என் மலர்
உள்ளூர் செய்திகள்
தேனி வீரபாண்டி கோவிலில் வழிபாட்டுக்கு வந்த பக்தரிடம் நகை, பணம் கொள்ளை
- வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சாமி கும்பிட வந்தபோது நடை அடைக்கப்பட்டதால் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் வழிபாடு செய்யலாம் என முடிவு செய்தனர்.
- அப்போது தங்கள் பையில் வைத்திருந்த 6 பவுன் நகை, செல்போன், ரொக்க பணம் ரூ.6800 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது
தேனி:
தேனி மாவட்டம் தேவாரம் போலீஸ் நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது40). இவரது மனைவி மாலதி. இவர்கள் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
சம்பவத்தன்று வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சாமி கும்பிட வந்தனர். அப்ேபாது நடை அடைக்கப்பட்டதால் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் வழிபாடு செய்யலாம் என முடிவு செய்தனர்.
அதன்படி கோவிலில் மாவிளக்கு எடுக்கும் இடத்தில் தூங்கிவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தனர். அப்போது தங்கள் பையில் வைத்திருந்த 6 பவுன் நகை, செல்போன், ரொக்க பணம் ரூ.6800 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 800 ஆகும். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோதும் தெரியவில்லை. இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா க்களை ஆராய்ந்து கொள்ளையர்களை போலீ சார் தேடி வருகின்றனர். கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.