என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே ஒரே நாளில் 4 வீடுகளில் நகை கொள்ளை

- பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5,1/2 பவுன் நகை,வீட்டில் இருந்த பத்திரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோய் இருந்தது.
- சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் சப்.இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏப்பாக்கம் கிராமத்தைசேர்ந்தவர் செல்வம் (வயது 47).விவசாயி. இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு அருகே இருக்கும் ஏப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது பூர்வீக ஊருக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீேராவை திறந்து அதில் இருந்த பணம்- நகையை கொள்ளையடித்து சென்றனர். மாலை நேரம் செல்வம் வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்கதவு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அடைந்துஉள்ளே சென்று பார்த்தபோது பீேராவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5,1/2 பவுன் நகை,வீட்டில் இருந்த பத்திரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோய் இருந்தது. இதுகுறித்துஒலக்கூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் சப்.இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதேபோல பாதிரி கிராமத்தை சேர்ந்த காளி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை,5000 ரூபாய் பணம்,ஆகியவை திருடிச் சென்றுள்ளனர்.மேலும் பாதிரி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் வீட்டை உடைத்து 2 பவுன் நகை மற்றும் 250 கிராம் கிலோவெள்ளி பொருட்கள் கொள்ளைபோய் இருந்தது. இதுதவிர நீலகண்டன் என்பவரது வீட்டிலும்கொள்ளையர்கள் 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர். தேபோ மேலும் பாங்களத்தூர் பாதிரி,போன்ற பல்வேறு இடங்களில் பூட்டை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்து உள்ளனர்.அங்கு எந்த பொருளும்இல்லாததால் அங்கிருந்து சென்றுள்ளனர். திண்டிவனம் பகுதியில் ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளைபோன சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.