என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்
- தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.
- முகாமில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குறிச்சான்பட்டி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், தென்காசி சட்ட மன்ற உறுப்பினர் பழனிநாடார் ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினர்.
இதில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், குறிச்சான்பட்டி ஒன்றிய கவுன்சிலர் முரளிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர், முதல் நிலை அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேலு, அன்பழகன், வாடியூர் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணிசாமி, குறிச்சான்பட்டி ஊராட்சி தலைவர் மகர ஜோதி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் முத்துலெட்சுமி, ஆலங்குளம் வட்டார மருத்துவர் ஆறுமுகம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி மற்றும் மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.