search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • வீட்டில் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்ற சந்திராவை விஷப்பாம்பு கடித்தது.
    • வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வெற்றி லைக்கார தெருவை சேர்ந்த வர் ரமேஷ். கூலி வேலை செய்து வருகிறார். இவரு டைய மனைவி சந்திரா (வயது 39) இவர்களுக்கு தினகரன், தீபா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2-ந்தேதி இவரது வீட்டில் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்ற சந்திராவை விஷப்பாம்பு கடித்தது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் சந்திரா வை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையாக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரா பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது கணவன் ரமேஷ் கொடுத்த புகா ரின் அடிப் படையில் வழக்கு பதிவு செய்த சின்ன சேலம் போலீ சார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    • பெண்கள் பதிவெட்டில் கையெழுத்திடும் போது அவர்களுக்கு தெரியாமல் செல் போனில் போட்டோ எடுத்துள்ளார்.
    • வசந்த குமார் தனது செல்போனை நண்பர் தினேசிடம் அடமானம் வைத்து பணம் பெற்று ள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்துள்ள வீரசோழபுரம் ஊராட்சியில் தற்காலிக பணிதள பொறுப்பாளராக பணிபுரிந்தவர் வசந்தகுமார் (வயது27).இவர் ஊரக வேைல திட்ட பணிக்கு வரும் பயனாளிகள் குறித்த பதிவேடுகளை பராமரிக்கும் வேலையை செய்த வந்தார். வேலை செய்த பெண்கள் பதிவெட்டில் கையெழுத்திடும் போது அவர்களுக்கு தெரியாமல் செல் போனில் போட்டோ எடுத்துள்ளார்.அவர்களின் முகத்தை ஆபாச படத்துடன் இணை த்து மார்பிங் செய்து ரசித்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் வசந்த குமார் தனது செல்போனை நண்பர் தினேசிடம் அடமா னம் வைத்து பணம் பெற்று ள்ளார்.

    அப்போது செல்போ னில் வைத்திருந்த ஆபாசப டங்களை அழித்து விட்டு கொடுத்துள்ளார். ஆனால் தினேஷ் அழிக்கப்பட்ட படங்களை மீட்டெடுத்து பார்த்து அதிர்ச்சி அடை ந்தார். ஆபாச படங்களை வார்டு உறுப்பினரான தங்கராஜ் மகன் ரவியிடம், தினேஷ் காண்பித்துள்ளார் . அப் படங்களை ரவி ேவறு சிலருக்கு பகிர்ந்துள்ளார். அந்த படங்களை பெண்களின் உறவினர் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வசந்த குமாரை கைது செய்யக் கோரி சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 100 நாள் வேலையில் பணியாற்றும் பெண்கள், பெண்களை ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோ மார்பிங் செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து வசந்த குமாரை போலீ சார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை வீரசோ ழபுரம் பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடு க்க வேண்டும் என கலெ க்டர் ஷ்ரவன் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் தினேஷ் மற்றும் ரவியை போலீசார் நேற்று கைது செய்தனர். கிராம மக்கள் மறியல் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சட்ட விரோதமாக ஒன்றுகூடி, சாலையை மறித்து, அரசு அனுமதியின்றி அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடப்பட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், கோவி ந்தராஜ், ஆனஸ்ட்ராஜ், சதீஷ், ராஜா, மணிகண்டன் உள்ளிட்ட 20 பேர் மீது புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கெடிலம் அருகே வந்தபோது கெடிலம் ஆற்றில் 4 மாட்டுவண்டிகளுடன் மர்ம நபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.
    • போலீசார் வருவதை பார்த்த மணல் அள்ளும் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் டி.எஸ்.பி மனோஷ்குமார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்த ரோந்து பணி இன்று காலை திருநாவலூர் பகுதியில் நடந்தது. அப்போது கெடிலம் அருகே வந்தபோது கெடிலம் ஆற்றில் 4 மாட்டுவண்டிகளுடன் மர்ம நபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். உடனே டி.எஸ்.பி தலைமையி லான போலீசார் அங்கு சென்றனர்.

    போலீசார் வருவதை பார்த்த மணல் அள்ளும் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    • மகாலட்சுமியிடம் குடும்ப செலவிற்காக கொடுக்கும் பணத்தை வீணாக செலவு செய்வதாக கண்டித்துள்ளார்.
    • இதுகுறித்து பாலு வரஞ்சரம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வானவரட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பாலு (37). இவருக்கும் மகாலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்று2 குழந்தைகள் உள்ளனர். பாலு தனது மனைவி மகாலட்சுமியிடம் குடும்ப செலவிற்காக கொடுக்கும் பணத்தை வீணாக செலவு செய்வதாக கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பாலு வெளியே சென்று விட்டு பின்னர் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது மனைவி மற்றும் மகன், மகளை அக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலு வரஞ்சரம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • இந்த ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் ஓட்டி சென்றார்.
    • உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே வைப்பாளையத்தை சேர்ந்த மாணவர்கள், கெடிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். அதன்படி இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு புறப்பட்டனர். இந்த ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 38) என்பவர் ஓட்டி சென்றார். இந்த ஆட்டோ பள்ளி அருகே சென்ற போது, சாலையில் இருந்த பள்ளத் தில் விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மாண வர்களின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் பதறிப்போய், மாணவர்களையும் ஆட்டோ டிரைவரையும் மீட்டனர்.

    இதில் டிரைவர், 5 மாணவர்கள் காயமடைந்த னர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநாவலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக உளுந்தூர்பே பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் திருநாவ லூர் இன்ஸ்பெக்டர் அசோ கன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண்களின் புகைப் படத்தை சேகரித்து அதனை ஆபாச மாக சித்தரித்து தனது செல்போனில் வைத்து உள்ளார்.
    • தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வீர சோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வசந்த் (27). இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணிக்கு வரும் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப் படத்தை சேகரித்து அதனை ஆபாசமாக சித்தரித்து தனது செல்போனில் வைத்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது செல்போனை நண்பர் தினேசிடம் (27) அடமானம் வைத்துள்ளார். நேற்று தினேஷ் செல்போனை எடுத்து பார்த்த போது தனது கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களை ஆபாசமா சித்தரித்து வைத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வார்டு உறுப்பினர் ரவியிடம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே இத்தகவல் வீரசோழபுரம் கிராமத்தில் காட்டுத்தீயாய் பரவியது. உடனே திரண்டு வந்த பெண்கள் தினேசிடம் போனை பிடுங்கி அதிலிருந்த புகைப்படங்களை பார்த்து கொந்தளித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்தும் வசந்த் கிராமத்திலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். உடனடியாக போலீசாார் வசந்த் இருக்கும் இடத்தை கண்டறிந்து முரார்பாளையம் அருகே அவரை கைது செய்தனர்.

    ஆனால் வசந்தை தங்கள் முன்னிலையில் கொண்டு வர வேண்டும் என்று கூறி கிராம மக்கள் 300பேர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் கைது செய்த வசந்தை தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே சாலை மறியல் கைவடுவதாக தெரிவித்தனர். இதனிடையே கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட கிராம பெண்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட னர். தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வசந்த் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது நண்பர் தினேஷையும் போலீசார் கைது செய்தனர். ரவியை தேடி வருகின்றனர். ரவி குடும்பத்திற்கும் தினேஷ் குடும்பத்திற்கும் தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் வசந்த் குடும்பத்தை பழிவாங்க ரவி இந்த விஷயத்தை வெளி கொண்டு வந்தது தெரிய வந்தது.

    • சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவிகளின் விடுதியில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அலுவலகத்தை பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சரவணா நகரில் அமை ந்துள்ள தனியார் பள்ளி மாணவிகள் விடுதியின் ஒருங்கிணைப்பாளராக பரமேஷ்வரன் மகன் சேவா (வயது 58) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 8-ந்தேதி அன்று பணி நிமித்தமாக விடுதியில் உள்ள அலுவலகத்தை பூட்டிவிட்டு கோயமுத்தூர் சென்றார். மீண்டும் 10-ந்தேதி திரும்பி வந்து அலுவலகத்தை பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது எல்.இ.டி. டிவி, ஸ்மார்ட் போன், தங்க நாணயங்கள், விலையுயர்ந்த டார்ச் லைட், ரூ.3 ஆயிரம் ஆகியன திருடு போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில் கனியாமூர் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது டீ குடித்துக் கொண்டிருந்த ஒருவர், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றார். அவரை மடக்கிப் பிடித்த போலீசார், போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில், கனியாமூர் வடக்கு வீதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 39) என்பதும், மாணவிகள் விடுதியில் பணம் மற்றும் பொருள்களை திருடியதும் தெரியவந்தது. மேலும், சின்னசேலம் ராஜேஸ்வரி தியேட்டரில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார்.
    • அப்போது ஜோதியின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயின் காணாமல் போனது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன் மனைவி ஜோதி (வயது 30). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். அப்பொழுது அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன்கள் சுரேந்திரன், வேலுமணி, ரத்தினன் மகன் ரமேஷ், சாமிதுரை மகன் செல்லமுத்து ஆகியோர் ஜோதியை பார்த்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு கொள்ளாமல் அவர் வீடு திரும்பினார்.

    ஆனால், 4 பேரும் ஜோதியை பின்தொடர்ந்து வந்தனர். பின்னர், அவரது வீட்டுக்கு சென்று ஜோதியை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது ஜோதியின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயின் காணாமல் போனது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் என தெரிகிறது. இது குறித்து ஜோதி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மூங்கில் துறைப்பட்டில் டிராக்டரில் சிக்கி இளம் பெண் பலியானார்.
    • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே இளையாங்கன்னி பகுதியை சேர்ந்த அருள் மனைவி ரேவதி(35) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ரேவதி மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி, அந்த வழியாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒருவர் பீரோவில் இருந்த ரூ.12 ஆயிரம் பணம், மோதி ரம் உள்ளிட்ட 3 சவரன் நகைகளை திருடிக்கொண்டி ருந்தான்.
    • மேலும் தொடர்ந்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ஷர்மிளா (வயது 21). இவர் சம்பவத்தன்று இவரது வீட்டிலிருந்து அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் சத்தம் கேட்டு ஷர்மிளா உள்ளே சென்று பார்த்த போது, அங்கு மர்ம நபர் ஒருவர் பீரோவில் இருந்த ரூ.12 ஆயிரம் பணம், மோதி ரம் உள்ளிட்ட 3 சவரன் நகைகளை திருடிக்கொண்டி ருந்தான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார். உடனே அந்த நபர் நகை, பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மர்ம நபர் பின்னால் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

    பின்னர் பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர் வாணாபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும், வீடு புகுந்து நகை, பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து திருடிய நகை, பணத்தை பறிமுதல் செய்த னர். மேலும் தொடர்ந்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் பங்கேற்கலாம்.
    • தோட்டக்கலை அலுவலகங்களில் வருகின்ற 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி, செப்.21-

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில், தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விள ங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளது. மேலும், சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பங்கேற்கலாம்.

    அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்து பிற விவசாயிகளிடம் பாரம் பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், முறை யான மண்வள மேம்பாடு அங்கக முறையில் விதை களை மீட்டெடுத்தல் போன்ற காரணங்களின் அடிப்படை யில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் சிறந்த விவசாயிகள் தேர்ந்தெ டுக்கப்படுவார்கள். மேலும், இதற்கான விண்ணப்பம் மற்றும் வழிகாட்டு நெறி முறைகள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்ப ட்டுள்ளது. விருது பெறுப வர்களுக்கு முதல் பரிசாக ரூ15,000 2-ம் பரிசாக ரூ.10,000 வரைவோலை வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க இத்திட்ட த்தின்கீழ் தோட்டக் கலை த்துறை இணைய தளத்தில் விண்ண ப்பிக்கலாம் அல்லது விண்ண ப்பங்களை பூர்த்தி செய்து வட்டார தோட்டக்கலை அலுவலகங்களில் வருகின்ற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும், கூடுதல் தகவலுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களான உமா கள்ளக்குறிச்சி- 8098327732, முருகன் சின்னசேலம்- 9787863135, சத்தியராஜ் சங்கராபுரம்- 9524737498, முருகன் ரிஷிவந்தியம்- 9688940083, சக்திவேல் திருக்கோவிலூர்- 7811967632, முரளி திருநா வலூர்- 9976196911, சொர்ணம் தியாகதுருகம்- 8903555527, விஜயலட்சுமி உளுந்தூர்பேட்டை- 9894142635, வாமலை வெள்ளி மலை- 9787237797 ஆகியோர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டும் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவல கங்களை நேரில் அணுகியும் தகவல் பெற்று பயன்பெற லாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • சிலைகள் சின்ன சேலத்தில் உள்ள முக்கிய வீதிகளில் தாரை தப்பட்டையுடன் ஊர்வல மாக சென்றது.
    • 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஏரியில் கரைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 3 அடி முதல் 10 அடி உயரம் வரை 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். அப்போது விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றது.  இந்நிலையில் 3-ம் நாளான நேற்று அனைத்து சிலைகளும் ஏரியில் கரைப்பதற்கு அந்தந்த பகுதியில் உள்ள சிலைகள் சின்ன சேலத்தில் உள்ள முக்கிய வீதிகளில் தாரை தப்பட்டை யுடன் ஊர்வல மாக சென்றது. இதனைக் காண திரளான பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை காவல் துறை துரிதமாக செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி பொதுமக்கள் செல்வதற்கு வழிவகுத்தனர். இந்த நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சின்ன சேலம் காவல் ஆய்வாளர் ராஜாராமன் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.

    பின்னர் விநாயகர் சிலையை ஒன்றன்பின் ஒன்றாக கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் உதவியுடனும் விநாயகர் சிலையை சின்னசேலம் ஏரியில் கரைக்கப்பட்டது. சிலையை கரைக்கும் போது பக்தர்கள் ஏரிக்குள் அனுமதிக்கவில்லை. முழுக்க முழுக்க போலீ சாரின் கட்டுப்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஏரியில் கரைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் இந்து முன்னணி சார்பாக நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு, இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் விழுப்புரம் மாவட்ட ஏ.டி.எஸ்.பி கோவிந்தராஜ் தலைமையில் திண்டி வனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக் டர்கள் கலையரசி, லட்சுமி, கலையரசன் நகரம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர். இந்து முன்னணி சார்பாக 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக அமைதியான முறையில் நடைபெற்றது.

    ×