என் மலர்
உள்ளூர் செய்திகள்
கல்வராயன்மலையில் படகு குளத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஏழைகளின் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.
- ற்றுலா பயணிகளின் கார், இரு சக்கர வாகனங்கள் படகு குளத்திற்கு உள்பகுதிக்கு சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஏழைகளின் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு புதுவை, கடலூர், சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கு ஏதுவாக கரியாலூர் - வெள்ளிமலை சாலையில் வனத்துறை சார்பில் படகு குளம் அமைக்கப்பட்டு படகு சவாரி செய்வதற்காக 9 படகுகளும் உள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் படகு குளத்தில் மூழ்கிக் கொண்டு தண்ணீர் செல்வதால் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 2 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் கார், இரு சக்கர வாகனங்கள் படகு குளத்திற்கு உள்பகுதிக்கு சென்று வர தடை விதிக்கும் விதமாக படகு குளத்திற்கு செல்லும் நுழைவாயில் பகுதியில் வனத்துறை சார்பில் 2 செக் போஸ்ட்கள் போட்டு வைத்துள்ளார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் இனிமேல் இருசக்கர வாகனமோ அல்லது கார், வேன் போன்ற வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் படகு குளம் பகுதிக்கு செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் படகு குளத்திற்கு செல்ல தடை இருப்பதாக கருதி தற்போது சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது.