என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் திருவேட்டக்குடி  ஆஞ்சநேயர் கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்:  சமூக வலைதளங்களில் வைரலானது
    X

    காரைக்கால் திருவேட்டக்குடி ஆஞ்சநேயர் கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்: சமூக வலைதளங்களில் வைரலானது

    இரவு நேரத்தில்2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து தூக்கி சென்றது சி.சி. டி.வி காட்சியில் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திருவேட்டக்குடி கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு போனது. இதனை அடுத்து இது குறித்து கோவில் நிர்வாகம், கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், இரவு நேரத்தில்2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து தூக்கி செல்லும் சி.சி. டி.வி காட்சி தற்போது சமூக வலைத்தளங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. தொடர்ந்து, மேலும் சி.சி. டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×