என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்கள் கார்கில் பிரமிடு தேசப்பற்று நாடகங்களில் நடித்து உயிரிழந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய காட்சி.
கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டம்

- பள்ளியில் நேற்று கார்கில் போரில் உயிர் துறந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
- இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன் தலைமை தாங்கினார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில் நேற்று கார்கில் போரில் உயிர் துறந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன் தலைமை தாங்கினார்.
பள்ளி தாளாளர் சாந்தி வேடியப்பன், பள்ளி நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் முதல்வர் வெற்றிவேல் செல்வம், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், உமாதேவி, ஏஞ்சலினா மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். கார்கில் போர் வெற்றி தினத்தைப் பற்றி மாணவர்களுக்கு உணர்த்தினர்.
இதில் மாணவர்கள் கார்கில் பிரமிடு தேசப்பற்று மிக்க நாடகங்களை நடித்தும் தேசப்பற்று மிக்க பாடல்கள் பாடியும் கார்கில் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்