என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூரில் அமைச்சர் உதயநிதியை தொடர்ந்து அய்யர்மலை பகுதியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள்

- கரூரில் அமைச்சர் உதயநிதியை தொடர்ந்து அய்யர்மலை பகுதியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டது
- சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி பிச்சை மரக் கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
குளித்தலை:
குளித்தலை அருகே சத் தியமங்கலம் ஊராட்சிக்குட் பட்ட அய்யர்மலை பகுதியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா–லின் 70-வது பிறந்த–நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12 லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெ–ரும் இயக்கம் தொடங்கப் பட்டது.இதனை கரூரில் அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்ததை தொடர்ந்து, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழி–காட்டுதலின்படி அய்யர் மலை பகுதியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி பிச்சை மரக் கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். விழாவில் குளித்தலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நீல–கண்டன், மேலாளர் சுரேஷ்,குமாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், சமூக ஆர்வ–லர் குமார் மற்றும் கரூர் மாவட்ட வனத்துறை வனச்சரக அலுவலர் செல்வகுமார், வனவர் கோபாலகிருஷ்ணன் மற் றும் வனத்துறையினர், சுகாதாரத்துறை சார்பாக டாக்டர் ரமேஷ் மற்றும் மருத்துவத்துறையினர் மற்றும் 500-க்கும் மேற் பட்ட பொதுமக்கள் மரக்கன்று–களை நட்டு வைத்தனர்.