என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடமாநில சிறுமிகள் 3 பேர் உட்பட 11 பேர் மீட்பு
- வடமாநில சிறுமிகள் 3 பேர் உட்பட 11 பேர் மீட்கப்பட்டனர்
- செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தவர்கள்
கரூர்,
சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபுரி மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து 3 சிறுமிகள் காணாமல் போனத தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், காணாமல்போன சிறுமிகள் தமிழகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சத்தீஸ்கரிலிருந்து குழந்தை நல அலுவலர், போலீசார் அடங்கிய குழுவினர் கரூர் மாவட்டத்துக்கு வந்தனர். தொடர்ந்து கரூர் சமூக பாதுகாப்பு துறை தனித்துணை ஆட்சியர் சைபுதீன் தலைமையில் சத்தீஸ்கர் குழுவினர் கரூர் அருகே வளையல்காரன் புதூரில் உள்ள தனிார் செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சத்தீஸ்கரில் காணாமல் போன 3 சிறுமிகள் உட்பட 11 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இது குறுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.