என் மலர்
உள்ளூர் செய்திகள்
15 ஆண்டுகளுக்கு பிறகு புங்காற்றில் வெள்ளம்
- 15 ஆண்டுகளுக்கு பிறகு புங்காற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது
- விவசாயிகள் - பொதுமக்கள் மகிழ்ச்சி
கரூர்:
குளித்தலை அருகே பஞ்சப்பட்டியில் தமிழகத்திலேயே அதிக பரப்பளவு கொண்ட மிகப்பெரிய மூன்றாவது ஏரி 1117 ஏக்கரில் உள்ளது, இந்த ஏரியில் உள்ள நீரால் 25 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் விவசாயம் செய்து பயனடைவர், இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கடவூர் மற்றும் காணி ஆலம்பட்டி பகுதிகளில் சுமார் 120 மில்லி மீட்டர் மழை பெய்து அப்பகுதியில் உள்ள புங்காறு என்ற ஆற்றில் வெள்ளம் போல் தண்ணீர் வந்து பஞ்சப்பட்டி குளத்தில் சுமார் இரண்டும் அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிறுத்தப்பட்டுள்ளது,
15 ஆண்டுகளுக்கு மேலாக புங்காற்றில் தண்ணீர் வெள்ளம் போல் வருவது அப்பகுதி மக்களிடையே மிகப் பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வரலாறு காணாத காட்சி போல் அப்பகுதி மக்கள் கண்டு களித்து வருகின்றனர், தற்பொழுது அப்பகுதிகளில் அதிக அளவு மானாவரி நிலங்கள் உள்ள நிலையில் கிணறு மற்றும் போர் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர், தற்பொழுது குளத்தில் இரண்டு அடிக்கு மேல் நீர் தேக்கி வைத்திருப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து விவசாயத்திற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று அப்பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
120 மில்லி மீட்டர் மழை பெய்தது இதுவே முதல் முறையாகும் என அப்பகுதி முதியவர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மழை பெய்தால் குளம் நிரம்பி விவசாயத்திற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர், பகுதி மக்கள் இது போன்ற நேரங்களில் மாயனூர் பகுதியில் இருந்து காவிரியில் அதிக அளவு வரும் உபரி நீரை பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டு வந்தால் அதிகளவு விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கைகளும் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.