என் மலர்
உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை
- போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கரூர் பழைய திண்டுக்கல் சாலையில்
கரூர்:
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து ஜவகர் பஜார், மாநகராட்சி அலுவலகம், அரசு பள்ளிகள், பி.எஸ்.என்.எல். அலுவலகம், மாரியம்மன் கோவில், மார்க்கெட் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் பழைய திண்டுக்கல் சாலை வழியாகதான் செல்கிறது. இதே போல் இந்த பகுதியில் இருந்து ஏராளமான வாகனங்கள் லைட் ஹவுஸ் கார்னர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. பழைய திண்டுக்கல் சாலை மக்கள் பாதையில் ஆரம்பித்து, ஜவகர் பஜார் வரை செல்கிறது.
இந்த சாலையின் இருபுறமும் வர்த்தக நிறுவனங்கள், திரையரங்கம், அரசு அருங்காட்சியகம் போன்றவை உள்ளன. வர்த்தக நிறுவனங்களுக்கு வந்து செல்லும் வாகனங்கள் சாலையோரம் நீண்ட நேரம் நிற்பதால் மற்ற வாகனங்கள் இந்த சாலையில் எளிதாக செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இது போன்ற நிகழ்வுகள் இந்த சாலையில் தினமும் நடைபெற்று வருவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
எனவே பழைய திண்டுக்கல் சாலையில் நிலவி வரும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு பழைய திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.