என் மலர்
உள்ளூர் செய்திகள்
சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை- கரூர் எஸ்.பி. சுந்தரவனம் எச்சரிக்கை
- இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும்.
- 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகளை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சிறார்களின் பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
கரூர்:
கரூர் மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
கரூர் மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும்.
இதேபோன்று நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செல்பவர்களை அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். மேலும், இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மது அருந்திவிட்டு ஓட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து சிறை தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகளை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சிறார்களின் பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.