என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
Byமாலை மலர்17 Nov 2022 12:39 PM IST
- அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
- முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
கரூர்:
குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:தமிழக அரசின் உயர் கல்வித்துறை அறிவிப்பின்படி இளங்கலை ஆங்கிலம், வணிக நிர்வாகவியல், அறிவியல், பாடப் பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், தாவரவியல், விலங்கியல், மின்னணுவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப்பிரிவுகளில் எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை நாளை வரை நடைபெற உள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாணவ, மாணவியர் கல்லூரியில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
X