என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சிவன் கோவில்களில் அஷ்டமி வழிபாடு
Byமாலை மலர்27 Jun 2023 1:24 PM IST
- சிவன் கோவில்களில் அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர்:
நன்செய் புகழூரில் மேகபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. புன்னம் புன்னைவனநாதர் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்மன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில் உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களில் அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
X