என் மலர்
உள்ளூர் செய்திகள்

குளித்தலை அருகே சிறுமிகள் மாயம்
கரூர்:
குளித்தலையை அடுத்த, மணவாசி பஞ்சாயத்து கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி மகள் ராஜலட்சுமி. கடந்த மாதம் 23-ந்தேதி முதல் இச்சிறுமியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்காததால் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.
இதேபோல், குளித்தலை, கடம்பர் கோவில், நமச்சிவாயம் நகரை சேர்ந்த செல்வராணி மகள் அசின், கடந்த மாதம் 13-ந்தேதி காணாமல் போனார். இதுகுறித்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் விசாரித்து, மாயமான சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், கடந்த 3-ந்தேதி, கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி அசின் மீண்டும் மாயமானார். செல்வராணி மீண்டும் அளித்த புகாரின் படி, குளித்தலை போலீசார் வழக்குப்ப திந்து, சிறுமியை தேடி வருகின்றனர்.