என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கரூரில் வானவில் மன்றம் தொடக்கம்-கலெக்டர் பிரபு சங்கர் தகவல் கரூரில் வானவில் மன்றம் தொடக்கம்-கலெக்டர் பிரபு சங்கர் தகவல்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/29/1906731-collectorkarurprabusangar.webp)
கரூரில் வானவில் மன்றம் தொடக்கம்-கலெக்டர் பிரபு சங்கர் தகவல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கரூரில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது
- இதற்காக கரூர் மாவட்டத்தில் 15 கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட 58 மேல்நிலைப்பள்ளிகள், 56 உயர்நிலைப்பள்ளிகள், 165 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 279 பள்ளிகளில், மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் விதமாக, வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் சுமார் 26,000 மாணவர்கள் பயன் பெறுவார்கள்.இத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு முதல்கட்டமாக கருர் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு ரூ.3 கோடியே 34 லட்சத்து 800 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக கரூர் மாவட்டத்தில் 15 கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வானவில் மன்ற செயல்பாடுகள் சிறந்த முறையில் மாணவர்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலமாக மாதம் ஒருமுறை கூட்டம் நடத்தப்படும். ஒவ்வொரு வகுப்பிலும் அறி வியல் மனப்பான்மையுடனும் ஆர்வத்துடன் செயல்பாடுகளில் பங்கேற்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநிலஅளவில் நடைபெற்ற மன்றப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.