என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூரில் சுதந்திர தினவிழா - கலெக்டர் பிரபு சங்கர் தேசிய கொடியை ஏற்றினார்

- கரூரில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.த.பிரபுசங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
- கலெக்டர் பிரபுசங்கர், பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 405 நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
கரூர் :
இந்தியத்திருநாட்டின் 75-வது சுதந்திர தின அமுதபெருவிழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.த.பிரபுசங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதானப் புறாக்களையும், தேசிய கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலை வகித் தார்.
தொடர்ந்து கலெக்டர் பிரபுசங்கர், பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 405 நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். மேலும் சிறந்த விவசாயி, சிறந்த தொழில்முனைவோர், தீண்டாமை இல்லா கிராமம் குழந்தை திரும–ணம் நடைபெறா கிராமம் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதேபோல், மொத்தம் 59 நபர்களுக்கு ரூ.1,01,26,225 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
பின்னர் சுதந்திர போராட்டத்தில் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய கரூர் வாங்கப்பாளையத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி முத்துசாமி (எ) காளிமுத்து என்பவரின் வீட்டிற்கு சென்று அவரது மணைவி பழனியம்மாளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமந்திராசலம், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துச்செல்வன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி ரூபினா, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.