என் மலர்
உள்ளூர் செய்திகள்
போக்குவரத்திற்கு இடையூறு செய்தவர் கைது
- தகாத வார்த்தைகளால் பொதுமக்களுக்கு அர்ச்சனை செய்து போக்குவரத்திற்கு இடையூறு செய்தவர் கைது செய்யப்பட்டார்
- போலீசாரின் அறிவுரை ஏற்க மறுத்ததால் கைது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியில் தார் சாலையில் நடுவில் நின்று கொண்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்து கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு ஒருவர் நின்று கொண்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று சாலையின் நடுவில் நின்று கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து கொண்டிருந்தவரை, இடையூறு செய்யாமல் அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் போலீசார் சொல்வதை கேட்காமல் நின்று கொண்டிருந்ததால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த வீரமணி (43) என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.