search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.
    • வேலை வாய்ப்பு வழிகாட்டுதல்களை ஏற்பாடு செய்தது

    கரூர்:

    கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, கரூர், சேலத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாலிட்டி டெக்னிக்கல் சேஃப்டி மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாலிட்டி டெக்னிக்கல் சேஃட்டி மேனேஜ்மென்ட் ஒருங்கிணைப்பாளர் அப்துல்லா, சேலம் மற்றும் கரூர் எம் குமாரசாமி பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.ரமேஷ் பாபு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைவர் மெக்கானிக்கல் மோகன்பிரசாத், ஐஏஎம் அப்துல்லா, கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி முதல்வர் ரமேஷ்பாபு, கரூர் எம்.குமாரசாமி கல்லூரி செயலாளர் டாக்டர்.ராமகிருஷ்ணன், எச்எஸ்இ துறைத் தலைவர் ஜான் கிரேட்சன், இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாலிட்டி டெக்ளிக்கல் சேஃப்டி மேனேஜ்மென்ட் , சேலம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை ஆசிரிய உறுப்பினர் டாக்டர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாலிட்டி டெக்னிக்கல் சேப்டி மேனேஜ்மென்ட் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

    மேலும், இந்த புரிந்துரைவு ஒப்பந்தத்தின் மூலம், எம் குமாரசாமி பொறியியல் கல்லூரி, சேலத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாலிட்டி டெக்னிக்கல் சேஃட்டி மேனேஜ்மென்ட் உடன் இணைந்து கருத்தரங்குகள், விருத்தினர் விரிவுரையாளர்கள் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல்களை ஏற்பாடு செய்தது.

    Next Story
    ×