search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் முத்தனூரில் செங்கல் சூளை அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு - கலெக்டரிடம் மனு அளித்தனர்
    X

    கரூர் முத்தனூரில் செங்கல் சூளை அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு - கலெக்டரிடம் மனு அளித்தனர்

    • இப்பகுதியில் செங்கல் சூளை அமைந்தால் புகை, அதிக வெப்பம் ஏற்படும்
    • காற்று மாசு ஏற்பட்டு பெண்கள், நோயாளிகள், குழந்தைகளுக்கு கடுமையான சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும்

    கரூர்:

    கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கரூர் ஒன்றியக்குழு சார்பில், கரூர் ஒன்றியச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

    மனுவில், கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் கோம்புபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது முத்தனூர். இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடியிருப்புக்கு அருகில் செங்கல் சூளை அமைக்க தனிநபர் ஒருவர் முயற்சித்து வருகிறார்.

    இப்பகுதியில் செங்கல் சூளை அமைந்தால் புகை, அதிக வெப்பம் ஏற்படும். இதனால் காற்று மாசு ஏற்பட்டு பெண்கள், நோயாளிகள், குழந்தைகளுக்கு கடுமையான சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும், இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். எனவே, குடியிருப்பு பகுதியில் செங்கள் சூளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முத்தனூர் கிராம பொதுமக்கள் சார்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கரூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு கோரிக்கை மனு அளித்தோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை.

    குடியிருப்பு பகுதியில் செங்கல்சூளை அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அமைத்தால் பொதுமக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றிய குழு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×