என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சாலையில் உள்ள மண் குவியலை அகற்ற கோரிக்கை
Byமாலை மலர்29 Sept 2022 2:45 PM IST
- சாலையில் உள்ள மண் குவியலை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.
கரூர்:
கரூர் - வாங்கல் சாலை, ரயில்வே மேம்பாலத்தின் கீழ், இருபுறமும் மண் தேங்கியுள்ளது. அப்பகுதியில் பழைய வீடுகளின் பராமரிப்பு பணிக்காக கட்டடங்களை இடித்து மண் குவியலை சாலையில் கொட்டுகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக, டூவீ லர்களில் செல்பவர்கள், கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். இதனால், வாங்கல் சாலையில், தேங்கிய மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
X