search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் சுட்டெரிக்கும் கோடை வெயில்
    X

    கரூரில் சுட்டெரிக்கும் கோடை வெயில்

    • பொதுமக்கள் கடும் அவதி
    • அக்னி நட்சத்திரம் எப்போது முடிவடையும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வழக்கத்தை விட கோடைவெயில் உச்சத் தில் இருந்ததால் அனைத்து தரப்பினர்களும் கடும் அவதிப்பட்டு விட்டனர். கடந்த இரண்டுவாரங்களாக தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்தது. கரூரிலும் இதன் தாக்கம் காரணமாக பரவலாகமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து, இதமான நிலை நிலவியது. இதனால், அனைத்து தரப்பினர்களும் ஓரளவு நிம்மதியடைந்தனர்.இந்நிலையில், மோக்கா புயல் சின்னம் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தில் ஓரளவு லேசான அளவில் மழை பெய்தது. அதற்கு பிறகு சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதக்கி வருகிறது. மேலும், மோக்கா புயல், தமிழகத்தில் இருந்து காற்றின் ஈரப்பதத்தை மாற்றி அமைத்துச் சென்று விட்டதால், சில நாட்களுக்கு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததோடு, இரவு முழுதும், வெயில் தாக்கம் பல்வேறு பாதிப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தியது. எந்த நாளும் இல்லாத அளவுக்கு நேற்று காலை முதல் இரவு வரை வெயில் காரணமாக குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பி னர்களும் மிகுந்த சிரமத்தை அனுபவித்து விட்டனர் என் பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் அக்னி நட்சத்திர வெயில் தாக்கி வருகிறது. இந்த காலக்கட்டத்தில், அதிகளவு வெயிலின் தாக்கம் இருக்கும் நிலையில், புயல் மற்றும் வெப்பசலனம் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்த நிலையில், திரும்பவும் கடந்த இரண்டு நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதக்கி வருவதால் எப்போது, இந்த அக்னி நட்சத்திர வெயில் முடிவ டையும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர்.

    Next Story
    ×