என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கிருஷ்ணராயபுரம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு கிருஷ்ணராயபுரம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு](https://media.maalaimalar.com/h-upload/2023/01/12/1820621-.webp)
கிருஷ்ணராயபுரம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கிருஷ்ணராயபுரம் அருகே விவசாயி அரிவாளால் தாக்கப்பட்டார்.
- ராஜேந்திரன் பலத்த வெட்டு காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கரூர்:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வலையார்பாளையத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் ராஜேந்திரன். இவரது தாய் பெயரில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தை ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன்கள் 3 பேரும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சித்தலவாய் மஞ்சமேட்டை சேர்ந்த நடேசன் மகன் ரமேஷ் (வயது 48)என்பவர் இந்த 6 ஏக்கர் நிலம் தனக்கு சொந்தம் என்றும், அதில் ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன்களுக்கு உரிமை இல்லை என கூறி பிரச்சனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜேந்திரன் தனது மனைவி மகேஸ்வரியுடன் தான் பயன்படுத்தி வரும் இடத்தினை சுத்தம் செய்த போது அங்கு வந்த ரமேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. ரமேஷ் அப்போது ராஜேந்திரனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ராஜேந்திரன் பலத்த வெட்டு காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.