என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
ெரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி
By
மாலை மலர்26 Dec 2022 2:28 PM IST

- ெரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார்.
- பலியானவர் பற்றி தெரிந்தால் தகவல் தரலாம்
கரூர்:
கரூர் அருகே, ெரயில் மோதியதில் அடையாளம் தெரியாத வாலிபர் உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் ெரயில்வே போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் - வெள்ளியணை ெரயில்வே ஸ்டேஷன்கள் இடையே கடந்த 24 -ந் தேதி காலை 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ெரயில் மோதி உயிரிழந்தார். அவர், சந்தன நிற காலணி, நீல நிற ஜீன்ஸ் பேன்ட், வெள்ளை கோடுபோட்ட நீல நிற சட்டை அணிந்துள்ளார். வலது கையில் ஒரு மச்சமும், வலது மார்பில் ஒரு மச்சமும் உள்ளது. இவரை பற்றி அடையாளம் தெரிந்தவர்கள், 94981-01979, 9498161238 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X