என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
1,905 மையங்களில் 34,237 பேருக்கு தடுப்பூசி
Byமாலை மலர்11 July 2022 2:14 PM IST
- 1,905 மையங்களில் 34,237 பேருக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
- 6,321 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்
கரூர்:
தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் 31-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதா நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பேருந்து, ரெயில் நிலையங்கள், பூங்காக்கள் என மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்படி கரூர் மாவட்ட த்தில் 1,905 மையங்களில் நடைபெற்றது. இதில் 1,629 பேர் முதல் தவணையும், 26,287 பேர் 2ம் தவணை தடுப்பூசியும், 6,321 பேர் பூஸ்டர் தடுப்பூசி என மொத்தம் 34,237 பேர் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டனர்.
Next Story
×
X