என் மலர்
உள்ளூர் செய்திகள்
தேவதானப்பட்டியில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு வழுக்குமரம் ஏறிய இளைஞர்கள்
- தேவதானப்பட்டி மெயின் ரோட்டில் பாலகிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி உற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
- விழாவின் முக்கிய நிகழ்வாக இரவு உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி மெயின் ரோட்டில் பாலகிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி உற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியாக இளைஞர்கள் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
3-ம் நாள் முடிவில் டெய்லர் சங்கம் சார்பில் பூப் பல்லக்கில் சாமி ஊர்வலம் வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இரவு உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுழற்சி முறையில் நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் மேட்டு வளைவு நாட்ட கள்ளர் இளைஞர்கள் ஏறினர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இறுதியாக மரத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள திருக்கோயில் பிரசாத பொட்டலத்தை இளைஞர்கள் எடுத்தனர். இந்த நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் பார்வையிட்டனர்.
திருவிழாவிற்கு தேவதானப்பட்டி காவல்துறை ஆய்வாளர் சங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா நிறைவாக திருக்கோயில் சார்பில் திருக்கோயில் நிர்வாகிக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டு விழா நிறைவு செய்யப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகி அருணாசேகர் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்தனர்.