search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்காளம்மன் கோவிலில் கும்ப பூஜை
    X

    அங்காளம்மன் கோவிலில் கும்ப பூஜை

    • அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா 11 நாட்கள் நடைபெற்றது.
    • கும்பகோணம் பூஜையில் வைக்கப்பட்ட சிறப்பு பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வெள்ளிச்சந்தை சாலையில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா 11 நாட்கள் நடைபெற்றது.

    விழாவையொட்டி அங்காளம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்று 11 நாட்களும் வீதி உலா நடைபெற்றன. தொடர்ந்து மயான கொள்ளை செல்லுதல் அம்மன் ஊர்வலம், வான வேடிக்கை, என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் கடைசி நாளான நேற்று அங்காளம்மன் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது இதைத் தொடர்ந்து இரவு அம்மனுக்கு கும்ப பூஜை நடைபெற்றது.

    இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது. பின்னர் மேள தாளங்கள் முழங்க அங்காளம்மனுக்கு பல்வேறு வகையான உணவுகள் படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த பூஜையில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜையொட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கும்பகோணம் பூஜையில் வைக்கப்பட்ட சிறப்பு பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×