என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மாரண்டஅள்ளி அருகே கொல்லாபுரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மாரண்டஅள்ளி அருகே கொல்லாபுரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/04/1876034-img-20230503-wa0048.webp)
கொல்லாபுரி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி.
மாரண்டஅள்ளி அருகே கொல்லாபுரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரிமாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சாமனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர், மாரியம்மன், கொல்லாபுரி மாரியம்மன் மற்றும் நவகிரக விக்ரகம் பிரதிஷ்டபான குடமுழுக்கு திருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.
இந்த விழா கடந்த 2-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதி நடைப்பெற்றது. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தம் மற்றும் பால் குடத்தை கோவில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து திருக்குட நன்னீராட்டு தீபாரதனை காட்டினார். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
பிறகு கோ பூஜை, பிம்பதரிசனம். மஹா மங்களராத்தி. தீர்த்த பிரசாத விநியோக செய்து ஶ்ரீ வரசித்தி விநாயகர். ஸ்ரீ மாரியம்மன். ஸ்ரீ கொல்லாபுரி மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாமி அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர், செய்திருந்தனர்.