என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கராபுரம் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
Byமாலை மலர்8 Sept 2023 2:18 PM IST
- நிலத்தில் கிழங்கு வெட்டுவதற்காக வேலைக்கு சென்றிருந்தார்.
- பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே கந்தன் இறந்துவிட்டதாக கூறினார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே தும்பை கிராமத்தை சேர்ந்தவர் கந்தன்(45) தொழிலாளி. இவர் கொசப்பாடி கிராமத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் கிழங்கு வெட்டுவதற்காக வேலைக்கு சென்றிருந்தார். அங்கு கிழங்கு வெட்டிக் கொண்டிருந்தபோது திடீரென கந்தன் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே கந்தன் இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் கந்தன் மனைவி மாதவி அளித்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
Next Story
×
X