என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கம்பம் அருகே முல்லைபெரியாற்றில் தொழிலாளி பிணம்
Byமாலை மலர்13 Oct 2022 10:48 AM IST
- வீட்டைவிட்டு வெளியேறிய தொழிலாளி தொட்டமாந்துரை முல்லைபெரியாற்றில் பிணமாக மிதந்தார்.
- கம்பம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கம்பம்:
கம்பத்தை சேர்ந்தவர் சரவணன்(51). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். தென்னைமரம் ஏறும் தொழிலாளி. குடிப்பழக்கத்தால் மனைவி கோவித்துக்கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் மரம் ஏறும்போது தவறிவிழுந்து இடுப்பில் அடிபட்டு பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேறிய சரவணன் மாயமானார்.
அவரை தேடி வந்தநிலையில் தொட்டமாந்துரை முல்லைபெரியாற்றில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
X