search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு
    X

    தென்காசியில் சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் ஆய்வு நடத்தியபோது எடுத்த படம். அருகில் கலெக்டர் ரவிச்சந்திரன், டி.ஆர்.ஓ. பத்மாவதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு

    • தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப்பணிகளை குழுவினர் பார்வையிட்டனர்.
    • ஆய்வில் டி.ஆர்.ஓ. பத்மாவதி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட் டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், சட்டமன்ற பேரவை செயலர் சீனிவாசன் மற்றும் உறுதிமொழிக்குழு உறுப்பி னர்கள் அண்ணாதுரை, அருள், மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயகுமார் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட னர்.

    அதன்படி தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை பார்வையிட்டனர். பின்னர் குற்றாலத்தில் உள்ள கலைவாணர் அரங்க த்தை புதுப்பித்தல் பணி நிறைவடைந்து பயன்பாட்டில் இருப்பதை பார்வையிட்டதோடு, குற்றலத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நல அரங்கம் வாரியத்தின் அமைப்புசார தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்குவத ற்கென உள்ள "திரு.வி.க. இல்லம்" எனும் விடுமுறை ஓய்வு இல்லம் புதுப்பித்தல் பணிகளை குழுவினர் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து குற்றாலம் பிரதான அருவி அருகில் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதலாக பெண்கள் உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கவும், கோவில் சுவரில் ஏற்பட்டிருக்கும் தீக்கறையை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கவும் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்ட போலீஸ் அலுவலக கட்டிடத்தையும், தென்காசி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டிட பணிகளையும், தென்காசி அரசு மருத்துவமனையில் புதிய மாவட்ட மருந்துகிடங்கு கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது டி.ஆர்.ஓ. பத்மாவதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பிரேமலதா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) முரளிசங்கர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள் வில்லியம் ஜேசுதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×