search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்கிறார் எம்.துரைசாமி
    X

    சென்னை ஐகோர்ட்

    சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்கிறார் எம்.துரைசாமி

    • தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் ஓய்வு பெற்றார்.
    • இதையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று பதவி ஏற்கிறார்.

    சென்னை:

    சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்று பணி ஓய்வு பெற்றார். இதனால் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இருப்பார் என மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரிக்கு வழியனுப்பு விழா நேற்று ஐகோர்ட்டு சார்பில் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், ஜனாதிபதியின் உத்தரவின்படி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று காலை 10 மணியளவில் பதவி ஏற்க உள்ளார். இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சி தலைமை நீதிபதி சேம்பரில் நடைபெற உள்ளது. இதன்பின்னர், பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமிக்கு சக நீதிபதிகள், மத்திய-மாநில அரசு வக்கீல்கள் வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள்.

    Next Story
    ×