என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் மலேசியா பயணி மயங்கி விழுந்து உயிரிழப்பு
- இருவரும் மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.
- ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே. நகர்:
மலேசியா சிலாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 68).
இவர் கடந்த 20-ந் தேதி மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்தார். பின்னர் தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மதுரை மெயின் ரோடு கோவில்பட்டிக்கு சென்றார்.
மீண்டும் மலேசியா செல்வதற்காக நேற்று இரவு திருச்சி விமான நிலையத்திற்கு தனது மனைவி அமுதாவுடன் வந்தார்.
இருவரும் மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.
அப்போது திடீரென ராஜலிங்கம் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அமுதா, அவரை உடனடியாக மீட்டு திருச்சி விமான நிலையத்தில் இருந்த தனியார் அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ராஜலிங்கம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையம் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.