என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தென்காசியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது தென்காசியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2023/07/11/1913482-1arrest.webp)
X
தென்காசியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது
By
TNLGanesh11 July 2023 2:36 PM IST
![TNLGanesh TNLGanesh](https://media.maalaimalar.com/profiles/75922/1728216-ganeshprofile.jpg)
- தென்காசி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தென்காசி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்காசி ஒப்பனை விநாயகர் கோவில் அருகே கேரளாவில் இருந்து கொண்டு வந்த லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த இலத்தூர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3,840 மதிப்பிலான 96 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
X