search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலம் அருவிகளில் குளிக்கும் பெண்களிடம் நகை பறித்தவர் கைது-64 பவுன் தங்க நகைகள் மீட்பு
    X

    மீட்கப்பட்ட நகைகளை படத்தில் காணலாம்.

    குற்றாலம் அருவிகளில் குளிக்கும் பெண்களிடம் நகை பறித்தவர் கைது-64 பவுன் தங்க நகைகள் மீட்பு

    • அருவிகளில் குளிக்கும்போது பெண்கள் அணிந்து வரும் தங்க நகைகளை திருடிச்செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
    • ராஜகோபால் என்பவர் அருவியில் குளிக்கும் பெண்களிடம் நகையை திருடியது தெரிய வந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கிவரும் குற்றாலம் அருவிகளில் சீசன் காலத்தில் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளிக்க வருவார்கள்.

    நகை திருட்டு

    அவ்வாறு அருவிகளில் குளிக்கும்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள் பகுதியில் பெண்கள் அணிந்து வரும் தங்க நகைகளை திருடிச்செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    கடந்த மாதம் 15-ந்தேதி அருவியில் குளித்த பல பெண்களின் தங்க நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. காமிரா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

    கைது

    தொடர்ந்து தனிப்படை அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால்(வயது 45) என்பவர் அருவியில் குளிக்கும் பெண்களிடம் நகையை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்த குற்றாலம் போலீசார் அவரிடமிருந்து 64 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். குற்றவாளியை பிடிப்பதற்கு சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சுந்தரி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து ஆகியோரை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×