என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

- கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடத்தப்படுகிறது.
- இந்த மாரத்தான் போட்டி 4 பிரிவுகளில் நடத்தப்படுகிறது.
சென்னை:
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடத்தப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டி 42.2 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கிலோ மீட்டர் தூரங்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓடுவதற்கு 73, 206 பேர் முன்பதிவு செய்துள்ளார்கள்.
அதிகாலை 4 மணியளவில் தொடங்கும் மாரத்தான் போட்டிகள் காலை 8 மணி அளவில் நிறைவடையும்.
கலைஞர் நினைவிடம் அருகில் தொடங்கும் போட்டிகள் காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓ.எம்.ஆர்.சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழிகளில் நடக்கிறது.
இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியின் 42 கிமீ பிரிவு இன்று அதிகாலை 4 மணிக்கு காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து தொடங்கியது. இதில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.