என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தோரணமலையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் - கலெக்டர் பரிசு வழங்கினார்
- தோரணமலையில் குடும்ப மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
- போட்டியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கடையம்:
மாரத்தான் போட்டி உலகம் முழுவதும் நடத்தப் படும் ஒரு விளையாட்டு. இந்த போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.
பெரும்பாலும் சர்வ தேச போட்டிகளில் மினி மாரத்தான் போட்டிகளுக் கான தூரம் 10 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. வெற்றியை சொல்ல ஓடிய இந்த போட்டியில் பங்கேற்றால் உடல் நலம் சிறப்படையும் என்பதோடு வாழ்வில் வெற்றியை காணலாம் என்ற நம்பிக்கை பலருக்கு உண்டு.
மேலும் தற்போது உலகம் முழுவதும் ஏதாவது ஒரு குறிக்கோளுடன் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று தென்காசி அருகே கடையம் தோரணமலையில் குடும்ப மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. உன்னதமான உணவு முறையுடன் ஆரோக்கியத்தை பேணு வதை வலியுறுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
மாரத்தான்
இதனை எம்.கே.வி.கே. தொண்டு நிறுவனம், தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் இணைந்து நடத்தியது. காலை 6 மணி அளவில் தென்காசி அருகே மத்தளம் பாறையில் உள்ள ஷோகோ நிறுவனம் முன்பு போட்டி தொடங்கியது. இதில் மாணவர்கள் இளைஞர்கள் என 100-க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டு ஓடினர். இதில் இளம் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
10 கிலோ மீட்டர்
போட்டியை தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.
ஓட்டப்பந்தய வீரர்கள் திரவியநகர், மாதாபுரம் செக்போஸ்ட், கானாவூர், வழியாக தோரணமலையை அடைந்தனர். அவர்கள் மொத்தம் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடி வெற்றி எல்லையை அடைந்தனர். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் டி.சர்ட், சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு
விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச் சந்திரன் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற வர்களுக்கு பரிசு களை வழங்கினார். முன்னதாக போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தோரணமலையில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
போட்டியில் முதலிடம் வந்த மாரிசரத் ரூ.10 ஆயிரம் பரிசை பெற்றார். 2-வதாக வந்த அஜித்குமார் ரூ.5 ஆயிரமும், 3-வது வந்த பத்ரி நாராயணன் ரூ.3 ஆயிரமும் பரிசாக பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை எம்.கே.வி.கே. தொண்டு நிறுவனம் பாலமுருகன், தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் ஆகியோர் செய்து இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்