என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னையில் 1-ந்தேதி 'டாஸ்மாக்' கடைகள் மூடல்: கலெக்டர் உத்தரவு
Byமாலை மலர்28 April 2023 7:43 AM IST
- அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
- தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை :
சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மே தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்கீழ், சென்னையில் உள்ள அனைத்து 'டாஸ்மாக்' கடைகளும், அனைத்து விதமான 'பார்'களும் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
X