search icon
என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • அந்தியோதயா ரெயில் சீர்காழியில் நின்று செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • அனைத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் ஜெக.சண்முகம் தலைமையில் சீர்காழியில் நடந்தது.

    மாவட்ட தலைவர் சுந்தரராசன், சிறப்பு தலைவர் ஜெயசந்திரன், வட்ட துணைத்தலைவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை விகித்தனர்.

    வட்ட பொருளர் தவகுமார் வரவேற்றார் .

    வாழ்வியலை நோக்கி என்ற தலைப்பில் தியாகராஜன், திருக்குறளும் மனித வாழ்வும் என்ற தலைப்பில் சக்ரபாணியும், சிந்திக்க சில நிமிடங்கள் என்ற தலைப்பில் வீரபாண்டியும், குண்டலகேசி என்ற தலைப்பில் சாமிதுரையும் சொற்பொழிவாற்றினர்.

    வைத்தினாசாமி, சக்கரவர்த்தி, மணிவாசகம், சிவபெருமான், ராஜா,ராதாகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    கூட்டத்தில் உரிய காலத்தில் டி.ஏ நிலுவையுடன் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது,

    மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில் நகரில் அனைத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைத்திட நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது, அந்தியோதயா ரயில் சீர்காழியில் நின்று செல்ல மத்திய அரசை வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் செயலர் சாம்சன் கில்பர்ட் நன்றி கூறினார்.

    • கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சேவை மைய கட்டிடம் உள்ளது.
    • அந்த கட்டத்தின் அருகில் ஒரு பாம்பு இருந்தது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சேவை மைய கட்டிடம் உள்ளது.

    இதில் மகளிர் திட்ட வாழ்வாதார இயக்கம் அலுவலகம் இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இக்கட்டிடத்தின் பின்பகுதியில் சுவரையொட்டி ஒரு பாம்பு படுத்து கிடந்ததை பார்த்து அங்குள்ள அனை வரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் நடவடிக்கை எடுத்ததன் பேரில், சீர்காழியை சேர்ந்த பாம்பு பாண்டியன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது பாம்பு ஓடிவிட்டது.

    அந்த பாம்பை பாண்டியன் சுமார் 2 மணி நேரம் தேடி கண்டுபிடித்து அதனை லாவகமாக பிடித்தார்.

    பின்னர் பிடிபட்ட பாம்பு கண்ணாடி விரியன் பாம்பு என்று அவர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து பிடிபட்ட பாம்பு கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழியி டம் ஒப்படைக்கப்பட்டு, சீர்காழி வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    • 2-வது நடைமேடையில் இருந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்த 1-வது நடைமேடைக்கு வந்தது.
    • மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    தரங்கம்பாடி:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் முக்கிய ரெயில் நிலையமாக மயிலாடுதுறை ரெயில் நிலையம் உள்ளது.

    பல ரெயில்களின் முக்கிய வழித்தடமாக இந்த ரெயில் நிலையம் உள்ளது.

    மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 5.55 மணிக்கு மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்

    1-வது நடைமேடையில் வரும் என அறிவிக்கப்பட்டது.

    இதனால் பயணிகள் அனைவரும் முதலாவது நடை மேடையில் தங்கள் பொருட்களுடன் கூடி இருந்தனர்.

    ஆனால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2-வது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது.

    இதனால் முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்தி றனாளி பயணிகள் என அனைவரும் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு ரெயில் நிலைய நடை மேம்பால படிகளில் ஏறி மிகுந்த சிரமத்துடன் 2-வது நடைமேடைக்கு சென்றனர்.

    சிலர் ரெயில்வே தண்டவா ளத்தில் இறங்கி கடந்து 2-வது நடைமேடையில் நின்ற மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினர்.

    இதன் பின் 2-வது நடைமேடையில் இருந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்த 1-வது நடை மேடைக்கு வந்தது.

    அப்போது 2-வது நடைமேடைக்கு சிரமத்துடன் தங்கள் உடைமைகளை சுமந்து வந்த பயணிகள் ரெயிலில் ஏற முடியாமல் மீண்டும் 1-வது நடைமேடைக்கு தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு சென்றனர்.

    இதனால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    இது குறித்து ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இது தொடர்பாக மயிலாடுதுறை ரெயில் நிலைய மேலாளர் சுபம் குமாரை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

    • சாலைகளில் குறுக்கே ஓடும் பன்றிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    • இடையூறாக உள்ள பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

    சீர்காழி:

    சீர்காழி நகரில் பல்வேறு பகுதிகளில் பன்றிகள் அதிகளவு சுற்றி திரிந்து வந்தது.

    இதனால் பெரும் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டத்தோடு, சாலைகளில் குறுக்கே ஓடும் பன்றிகளால் போக்குவரத்துபாதிப்பு, விபத்தும் ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து இடையூறாக உள்ள பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்திட பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கலெக்டரின் அறிவுறுத்தலின்படி, நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், ஆணையர் ஹேமலதா ஆகியோர் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கரராஜ் முன்னிலையில் பரப்புரையாளர்கள் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்டோர் நகரில் சுற்றிதிரிந்த 80 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.

    • தினமும் சேரும் குப்பைகளை சாலையில் கொட்டாமல் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
    • கூட்டத்தில் சாலையோர கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் தீபாவளி பண்டிகையொட்டி 13-வது வார்டுக்கு உட்பட்ட தேர் வடக்குவீதி, மேலவீதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக சாலை யோரக டைகள் அமைக்க ப்படுவது வழக்கம்.அதன்படி நிகழாண்டு சாலையோர கடைகள் அமைக்கப்ப ட்டுவருகிறது. இதனிடையே சாலையோர கடை வியா பாரிகளுடனான ஆலோ சனைக்கூட்டம் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் முபாரக் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கரன், சீர்காழி அனைத்து வணிகர்கள் நல சங்க தலைவர் பாபு.கே.விஜயன் முன்னிலை வகித்தனர்.இதில் தகர கொட்டகை அமைத்து தற்காலிக கடை அமைத்துக்கொள்வது, நாள்தோறும் சேரும் குப்பைகளை சாலையில் கொட்டாமல் பெரிய நெகிழி பையில் வைத்து கடை உரிமையாளர்களே தூய்மைபணியாளர்களிடம் வழங்கிடுவது, கடைக்கு நகராட்சிக்கு மட்டும் உரிய தொகையை செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. இந்த கூட்டத்தில் சாலையோர கடை உரிமையாளர்கள் பலர் பங்கேற்றனர்.

    • பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலையில் சாலைகள் மிகவும் மோசாக உள்ளது.
    • போர்கால அடிப்படையில் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம் மகேந்திரப்பள்ளி ஊராட்சி க்கு உட்பட்ட பல்வேறு சாலைகளை சேதமடைந்துள்ளதால் அதனை சீரமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்ப பட்டுள்ளது. இது குறித்து மகேந்திரப்பள்ளி ஊராட்சி பெரிய தெருவை சேர்ந்த வழக்கறிஞர் அம்சேந்திரன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, மயிலாடுதுறை மாவட்ட கொள்ளிடம் ஒன்றியம் மகே ந்திரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியதெரு செல்லும் சாலை, தோப்புமேடு முதல் காளியம்மன் கோவில் வரை உள்ள சாலை, காக்கா முக்கூட்டு சாலை குருமாங்கோட்டகம் சாலை,மகேந்திரப்பள்ளி ஊராட்சி,காட்டூர் ஊராட்சி மக்கள் மயானத்திற்கு செல்லும் சாலை ஆகிய சாலைகள் முழுவதுமாக மோசமான நிலையில் பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலையில் உள்ளது. ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி போர்கால அடிப்படையில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் பாதி திறக்கப்பட்டிருந்தது.
    • பணம் வைத்திருக்கும் கல்லாப்பெட்டி மேஜை காணாதது கண்டு திடுக்கிட்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 60).

    இவர் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகே திட்டை செல்லும் சாலையில் அரிசி கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் பாதி திறக்கப்பட்டிருந்தது.

    அதிர்ச்சி அடைந்த சேகர் கடையினுள் சென்று பார்த்தபோது பணம் வைத்திருக்கும் கல்லாப்பெட்டி மேஜை காணாதது கண்டு திடுக்கிட்டார் .

    அப்போது கல்லாப்பெட்டி மேஜை சுமார் 200 மீட்டர் தூரத்தில் எதிரே உள்ள கட்டுமான பணி நடைபெறும் கட்டடம் அருகே கிடந்தது.

    உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.95 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சேகர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கூட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் 50 பேர் கலந்து கொண்டனர்.
    • உழவன் செயலியில் உள்ள பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தாலுக்கா, சித்தமல்லி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24 ஆண்டிற்கான கிராம வேளாண் முன்னேற்றக் குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் 50 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் வேளாண்மை துணை அலுவலர் பிரபாகரன் சம்பா சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்தும் நுண்ணுட்ட சத்துக்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் உயிர் உரங்கள் பயன்பாடு அதன் செயல்பாடுகள் பற்றியும் எடுத்து கூறினார்.

    முதலில் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மானிய விபரங்கள் இடுபொ ருள்கள் இருப்பு போன்ற தகவல்களை வேளாண்மை உதவி அலுவலர் பாபு விளக்கினார்.

    மேலும் மழைக் காலங்களில் நெல் பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல், நோய்கட்டுப்பாடு போன்றவற்றை பற்றியும் பசுமை போர்வை திட்டத்தில் எப்படி பதிவு செய்து கொள்வது மேலும் உழவன் செயலியில் உள்ள பயன்பாடுகள் குறித்தும் இடுபொருள்கள் முன்பதிவு எப்படி செய்வது போன்ற விபரங்களும், வானிலை அறிக்கையை தெரிந்து கொள்வது போன்றவற்றை ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் எடுத்துக் கூறினார்.

    நிகழ்ச்சியின் முடிவில் ஆத்மா திட்ட உதவி மேலாளர் விஜய் நன்றி கூறினார்.

    • கோழிக்கூண்டில் புகுந்த நான்கரை அடி நீளம் கொண்ட நாகப்பாம்பையும் பாண்டியன் லாவகமாக பிடித்தார்.
    • அறையில் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே மங்கைமடம் பகுதியில் ஸ்வீட் கடை குடோனில் இனிப்புகள் தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    அப்போது அங்கு பொருட்கள் வைத்திருக்கும் பகுதியில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் உடனே சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் அளித்தார்.

    அதன்படி அங்கு சென்ற பாம்பு பாண்டியன் ஸ்வீட் குடோனில் புகுந்திருந்த நான்கடி நீளம் கொண்ட நாகப் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டார்.

    இதேபோல் உச்சிமேட்டில் உள்ள வீட்டில் கோழிக்கூண்டில் புகுந்த நான்கரை அடி நீளம் கொண்ட நாகப்பாம்பையும் பாண்டியன் லாவகமாக பிடித்தார்.

    அப்போது கோழியை விழுங்கி இருப்பது அறிந்த பாண்டியன் பாம்பை பிடித்த போது அது விழுங்கிய கோழியை கக்கி வெளியேற்றியது.

    அதன் பின்னர் அந்த பாம்பைடப்பாவில் அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு விட்டார்.

    இதேப்போல் சீர்காழி தலைமை தபால் நிலையத்தில் பதிவேடுகள் அறையில் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வன பகுதியில் கொண்டு விட்டனர்.

    • பல்வேறு இடங்களில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்பட தொடங்கி உள்ளன.
    • பட்டாசு கடைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு மயிலாடுதுறை , செம்ப னார்கோயில், சீர்காழி, குத்தாலம், மங்க நல்லூர், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் 300க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்பட துவங்கியுள்ளன.

    இந்நிலையில் பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கடை உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் கலெக்டர் மகா பாரதி தலைமையில் மயிலா டுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி.மீனா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    தொட ர்ந்து பேசிய மாவட்ட கலெக்டர் மகா பாரதி பட்டாசு கடைகளில்உரிய பாதுகாப்பு நடவடி க்கை களை மேற்கொள்ள வேண்டும் எனஅறிவுறு த்தினர்.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த பட்டாசு கடை உரிமை யாளர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் மயிலாடுதுறை தாசில்தார் சபிதா, தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி மங்கையர்கரசி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்தன.

    இதையடுத்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது.

    அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசத்திற்கு ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீனவர்கள் செந்தில்குமார், மதன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.
    • வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், மதன், சிவகுமார், நித்தியகுமார். இவர்கள் 4 பேரும் நேற்று இரவு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இன்று அதிகாலை நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு படகில் வந்த 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென மீனவர்கள் படகில் ஏறி 4 பேரையும் கத்தியை காட்டி பொருட்களை கொடுக்குமாறு மிரட்டினர். அதற்கு மீனவர்கள் கொடுக்க மறுத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் 4 பேரையும் மூங்கில் கட்டையால் சரமாரியாக தாக்கி மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ் கருவிகள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புடைய மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் செந்தில்குமார், மதன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்களை சக மீனவர்கள் மீட்டு வேகவேகமாக கரைக்கு திரும்பினர். பின்னர் 2 பேரையும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் அடிக்கடி தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவது மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×