search icon
என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம்.
    • மேலும், கடை சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி சீர்காழி நகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் முக்கூட்டு சாலையில் இயங்கி வந்த பல்பொருள் விற்பனை பெட்டிக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, அங்கு புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் மற்றும் தேனீர் கப்புகள் இருந்ததை கண்டறிந்து பெட்டிக்கடை உரிமையாளரிடம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற வகையிலான புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளரிடம் மாவட்ட கலெக்டர் எச்சரித்தார்.

    மேலும், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட ஈசானிய தெருவில் இயங்கி வரும் பல்பொருள் விற்பனை பெட்டிக்கடையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, கடை உரிமையாளரிடம் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்க ளுக்கு தீங்கு விளைவிக்கின்ற வகையிலான போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடை சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மகாபாரதி கூறினார்.

    தொடர்ந்து, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை மேற்கூரை கடந்த சில தினங்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததை யொட்டி, மாவட்ட கலெக்டர் துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளி சமையலறை, புதிய கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் எடுக்க ப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆணையரிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, நகராட்சி ஆணையர் ஹேமலதா , நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன் , நகர் மன்ற உறுப்பினர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • 20 ஆயிரம் டன் மூட்டைகள் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    • குறைந்தபட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 93 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த பயிர்கள் ஆகஸ்டு மாதத்தில் துவங்கி அறுவடை செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சேமிப்பு கட்டிடங்கள் கூடிய நெல் கொள்முதல் நிலையம், திறந்தவெளி கொள்முதல் நிலையம் என 120 இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    கொள்முதல் நிலையங்களிலும் இதுவரை 35ஆயிரம் டன்களுக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் 20 ஆயிரம் டன் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    15 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடப்பதால் எடை குறைவு ஏற்பட்டால் ஊழியர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து கொள்முதல் நிலைய ஊழியர்கள், விவசாயிகள் தெரிவிக்கையில் குறுவை நெல் எப்போதும் அறுவடை செய்து பல நாட்கள் அடுக்கிவைத்திருந்தால் இயல்பாகவே எடை குறையும்.

    கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டுசெல்லப்படாமல் தேங்கி கிடக்கிறது, கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை நேரத்தில் மழையும் பெய்துவருகிறது.

    கடந்த சில வாரங்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் குறைந்த பட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் குறையாமல் தேங்கி கிடக்கிறது,

    இதனால் ஏற்படும் எடை இழப்பிற்கு ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது.

    மேலும் மழைபெய்வதாலும், கால்நடைகள், எலி ஆகியவற்றால் ஏற்படும் சேதத்திற்கும் ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது, கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைவத்றகு முன்பு உடனுக்குடன் கிடங்கிற்கு கொண்டு செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுதரக்கோரி போராட்டம் நடந்தது.
    • அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிரை காப்பாற்ற தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்று தரக் கோரி தொடர் முழக்கப் போராட்டம் நடை பெறுகிறது.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சிம்சன், வீரராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மதியழகன் முன்னிலை வகித்தாார்.

    போராட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளான காவிரியில் கர்நாடக வழங்க வேண்டிய சட்டரீ தியான தண்ணீரைஉடனடி யாக திறந்துவிட உச்ச நீதி மன்றம் அவசர வழக்காக எடுத்து உடனே உத்தரவிட வேண்டும், குருவைசாகுபடி யில் பாதிக்க ப்பட்டஅனை த்து விவசாயி களுக்கும் ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரியில் தமிழகத்துக்கு மாத வாரிய தண்ணீர் வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கர்நாடக அரசு தர மறுத்தால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து தண்ணீர் வழங்கிட வேண்டும்.

    உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    போராட்டத்தை தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொருளாளர் பெருமாள் தொடங்கி வைத்தார்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், பொதுச் செயலாளர் மாசிலா மணி, டெல்டா பாசன விவசாய சங்க தலைவர் அன்பழகன், காவிரி டெல்டா பாசனக்காரர்கள் முன்னேற்ற சங்கம் தலைவர் குரு கோபி கணேசன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், உள்ளிட்ட ஏராளமான அனைத்து கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    • பனமங்கலம் பகுதியில் குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
    • கூண்டுகள் அமைத்து 9 குரங்குகளை பிடித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பனமங்கலம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

    வீட்டு விலங்குகளான ஆடு,மாடுகளை கடித்தும் வீட்டுக்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடியும் பொதுமக்களை மிகவும் அவதிக்கு உள்ளாக்கியது. குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த கோரி சீர்காழி நகராட்சியில் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனை அடுத்து அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் முழுமதி இமயவரம்பன் சொந்த செலவில் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த முடிவெடுத்தார்.

    தொடர்ந்து குரங்கு பிடிக்கும் நபர்களை அழைத்து வந்து கூண்டுகள் அமைத்து 9 குரங்குகளை பிடித்தனர்.குரங்குகள் பிடிக்கப்பட்டது குறித்து சீர்காழி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் விரைந்து வந்த சீர்காழி வனத்துறை வனவரிடம் குரங்குகளை ஒப்படைத்தனர்.

    இதனை யடுத்து பிடிக்கப்பட்ட குரங்குகள் அனைத்தையும் வனத்துறையினர் மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டு சென்றனர்.

    • சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை காரைகள் இடிந்து விழுந்தது.
    • நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆய்வு மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு துறையூர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 16 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    மதிய உணவிற்காக சமையலர் கலா உணவு தயார் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளார்.

    அப்போது தலைமை ஆசிரியை அழைத்ததால் கலா சமையலறையை விட்டு வெளியே வந்துள்ளார் அந்த நேரம் திடீரென சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை காரைகள் இடிந்து விழுந்தது.

    இவ்விபத்தில் சமையலறையில் இருந்த அடுப்பு மற்றும் சமையல் உபகரணங்கள் சேதம டைந்தன.

    சமையலர் கலா வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    47 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமையலறை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்,

    இந்நிலையில் சமையல் கட்டிடத்தை பார்வையிட்டு நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது துறையூர் நகராட்சி தொடக்கப்ப ள்ளிக்கு வகுப்பறைகள் கட்டடம் கட்டுவதற்கு ரூ.33 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும், அது வரை தகர ஷெட் அமைத்து சமையலறை பயன்படுத்தப்படும் என ஆணையர் மற்றும் நகர் மன்ற தலைவர் தெரிவித்தனர்.

    ஆய்வின் போது நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் , நகர்மன்ற உறுப்பினர் முழு மதி இமயவரம்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அலுவலக நாட்களில் உதவி முகாம்கள் நடைபெற உள்ளது.
    • இ-சேவை மையம் வழியாக கட்டணம் ஏதுமின்றி வருவாய் கோட்ட அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குடும்பத்திற்காக வாழ்நாள் எல்லாம் ஓயாமல் உழைத்து கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பு க்கு கொடுக்கும் அங்கீகாரமாகும்.

    இந்த முதன்மையான திட்டத்தின் மூலம் மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் திட்டமானது 15.9.23 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 தொகையானது வரவு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விண்ணப்பி க்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதார ர்களுக்கான குறுஞ்செய்தி 18.09.2023 முதல் இந்த மாத இறுதி வரை அவர்களுடைய கைபேசி எண்ணிற்கு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    தகுதியான விண்ணப்பதாரராக இருந்து நிராகரிக்கப்பட்டதாக கருதும் விண்ணப்பதாரர்கள் தங்கள் மேல்முறையீட்டினை அருகில் உள்ள இ-சேவை மையம் வழியாக கட்டணம் ஏதுமின்றி வருவாய் கோட்ட அலுவலருக்கு விண்ணப்பிக்கலம்.

    இந்நிலையில் தகுதியான விண்ணப்பதார்களின் நிராகரிப்பிற்கான காரணம் தெளிவாக, அறிந்து கொள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அல்லது அறிவிக்கப்படாத விண்ணப்பதார ர்களுக்கென உதவி முகாம்கள் நடைபெறும் இடங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை, தொலைபேசி எண்: 04364 - 222588, மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலகம், தொலைபேசி எண்: 04364 - 222033, சீர்காழி வருவாய் கோட்ட அலுவலகம், தொலைபேசி எண்: 04364 - 270222, மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம், தொலைபேசி எண்: 04364 - 222456, குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம், கைப்பேசி எண்: 9943506139, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம், தொலைபேசி எண்: 04364 - 270527, தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம், தொலைபேசி எண்: 04364 - 289439, ஆகிய இடங்களில் அலுவலக நாட்களில் உதவி முகாம்கள் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் தங்கள் விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்கள், மேல்முறையீடு விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் தெரிந்துக்கொண்டு மேல்முறையீடு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இயற்கை உரம் தயாரிக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • மக்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி ஊழியக்காரன்தோப்பு நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஈசானி யத்தெருவில் அமைந்துள்ள நகராட்சி நுண்ணுயிர் உரக்கிடங்கில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் முறை, குப்பைகளை எவ்வாறு கையாளுவது, மக்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது அதன் பயன்பாடு குறித்து செயல்விளக்கத்துடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நகராட்சி ஆணையர் வி.ஹேமலதா தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் முன்னிலை வகித்தார். நகரமைப்பு ஆய்வர் மு.மரகதம் மற்றும் சுகாதார ஆய்வர் டேவிட் பாஸ்கர்ராஜ் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு விழிப்பு ணர்வு செயல்விளக்கம் அளித்தனர்.

    அப்போது 3-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பி.கஸ்தூரிபாய் மற்றும் 5 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கலைச்செல்வி பங்கேற்றனர்.

    • வதான்யேஸ்வரர் கோவிலில் கடந்த 10-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் (வள்ளலார்) கோவில் குரு பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.

    இக்கோவிலில் கடந்த 10 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வதான்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சாமி திருக்கோயில் கடந்த 3ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

    வதான்யேஸ்வரர் கோயில், மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இரு ஆதீனங்கள் சார்பில் தமிழக முதல்வர் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாததால் நேற்று இரண்டு கோயில்களிலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

    • நகரில் மொத்தம் 41 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சீர்காழி நகர் மற்றும் புளிச்சக்காடு, நந்தியநல்லூரர், பட்டவி ளாகம், திட்டை, கோயில்பத்து, வினாயக ர்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆபத்து காத்தவிநாயகர், கணநாதர், சித்திவிநாயகர்,விஸ்வரூப விநாயகர்.

    மாணிக்க விநாயகர், செங்கழுநீர் விநாயகர், ராஷ்ட்ர விநாயகர், சித்திவிநாயகர், வீரசக்திவிநாயகர், செல்வவிநாயகர் என 41 இடங்களில் விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு 3தினங்கள் வழிபாடு நடைபெற்றது.இதனிடையே திங்கள்கிழமை 5விநா யகர்சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்ட நிலையில் செவ்வாய் இரவு மீதமுள்ள 36விநா யகர்சிலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.

    முன்னதாக சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு அனைத்து விநாயகர் சிலைகளும் சிறப்பு பேன்டு வாத்தியம், வாணவே டிக்கையுடன் ஊர்வலமாக பழைய பேருந்துநிலையத்தில் ஒன்றிணைந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்ட பின்னர் ஊர்வலமாக உப்பனாற்றுக்கு சென்றது.

    உப்பனாற்றில் அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன.இதில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.சர ண்ராஜ்,விநாயகர் சதுர்த்தி விழாக்குழு ஒருங்கிணை ப்பாளர் வி.கே.செந்தில்கு மார், மற்றும் பலர் பங்கே ற்றனர். சீர்காழி டி.எஸ்.பி.லா மெக் மேற்பார்வையில் , காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ௨௦௦-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டி ருந்தனர். பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்கால் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோவில் அருகில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    நேற்று மாலை ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்டு பூதலூர் பெரியார் புரத்தில் இருந்து அதிரடி இசை முழங்க ஊர்வலம் தொடங்கியது.ஊர்வலம் வடக்கு பூதலூர் வந்த போது மழை பெய்தது மழையில் நனைந்து கொண்டே விநாயகர் ஊர்வலம் சென்று வெண்ணாற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

    • முடிகண்டநல்லூர் கொள்ளிடம் தலைமை குடியேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • மின்மோட்டார் பம்பு பழுது, நீரேற்று குழாய் கசிவு ஏற்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் ஆகிய 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாது என நகராட்சி ஆணையர் ஏ.சங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மயிலாடுதுறை நகராட்சி குடிநீர் திட்டத்தின்கீழ் முடிகண்டநல்லூர் கொள்ளிடம் தலைமை குடியேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது, தலைமை குடிநீரேற்று நிலைய மின்மோட்டார் பம்பு பழுது, நீரேற்று குழாய் கசிவு ஏற்பட்டுள்ளதால் நாளையும் (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    எனவே நகராட்சி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விளைநிலங்களின் வழியாக செல்லும் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது.
    • எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படலாம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளன. இந்த விளைநிலங்களின் வழியாக செல்லும் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது.

    இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம். இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மின்சார வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்துள்ளனர்.

    ஆனாலும் அது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    கடந்த 3 மாதத்திற்கு மேலாக சாய்ந்த நிலையில் உள்ள இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படலாம்.

    அதற்கு முன்னதாகவே விழித்துக் கொண்டு மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • பவித்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • முக்கிய திருவிழாவான கருட சேவை நடந்தது.

    திருவெண்காடு:

    திருவெண்காடு அருகே நாங்கூர் கீழச்சாலையில் மாதவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் பவித்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான கருட சேவை நடந்தது.

    இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோவில் ஆதீன கர்த்தர் சீனிவாசா பட்டாச்சாரியார், அடியார்கள் திருகூட்டத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×