என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
அதிகமாக பயணம் செய்த மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு குலுக்கலில் பரிசு
By
மாலை மலர்25 Nov 2022 4:03 PM IST

- மெட்ரோ ரெயில் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தலைமையில் இதற்கான குலுக்கல் நடந்தது.
- தேர்வு செய்யப்பட்ட 30 பேருக்கும் விரைவில் பரிசு வழங்கப்படும்.
சென்னை:
மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் அதிகம் பயணம் செய்த பயணிகளுக்கு குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தலைமையில் இதற்கான குலுக்கல் நடந்தது. ரூ.2000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்வதற்கான பயண அட்டையை வழங்கப்படும்.
மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1500-ம் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பேர், மெட்ரோ பயண அட்டை வாங்கி அதில் குறைந்தபட்ச தொகையான ரூ.500-க்கு டாப் அப் செய்த 10 பயணிகளுக்கு தலா ரூ.1450-க்கு இலவச டாப் அப் மற்றும் ரூ.2000 மதிப்புள்ள பரிசு கூப்பன் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட 30 பேருக்கும் விரைவில் பரிசு வழங்கப்படும்.
Next Story
×
X