என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
மீஞ்சூர் அருகே பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
By
Suresh K Jangir21 Oct 2022 12:33 PM IST

- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இருந்தது.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து தண்ணீர் கசிவுடன் கான்கிரீட் கலவை பெயர்ந்து.
மீஞ்சூர் ஒன்றியம் வெள்ளி வாயில் சாவடி ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இருந்தது.
சேக்கன் காலனி கிருஷ்ணா நகர், சில்வர் நகர், திருவுடையம்மன் நகர், புதுச்சேகன் காலனி, உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாய் மூலம் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து தண்ணீர் கசிவுடன் கான்கிரீட் கலவை பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் கீழே இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே ஆபத்தான மேல்நிலைத தொட்டியை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story
×
X